- இரட்டைக்கிளவி என்றால் என்னவென்று நாமறிவோம். ஆம் 'உரிச்சொல்' தான்.
- ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்போருக்கு 'Ding Dong' என்று எழுதினால், அது மணியோசையைக் குறிக்கின்றது என்று புரியும். ஒரு 'ஒலியை' குறிக்கின்றது என்று புரிந்துகொள்வார்கள் .
- அதைப்போலத் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களில் 'டிஷ்யூம்/Dishyum' என்றால் சண்டையில் அடிவிழும் பொழுது எழும் 'ஒலி' என்று நாம் அந்தக் குறிப்பை உணர்ந்துகொள்வோம்.
- இதைப்போன்ற 'இசை/ஓசை/ஒலி'க் குறிப்பை உணர்த்தும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் onamatopoeia என்று பெயர்.
கதவைத் ' தடதட ' என்று தட்டினான்.
-- ' தடதட ' என்பது இசை/ஓசை/ஒலியை உணர்த்தும் குறிப்பு.பால் 'சலசல' என்று இருந்தது.
-- ' சலசல ' என்பது பண்பை உணர்த்தும் குறிப்பு.
குழந்தை 'திருதிரு' என்று முழித்தது
-- ' திருதிரு ' என்பது ஒருவித நிலையை உணர்த்தும் குறிப்பு.
- தட,சல,திரு என்றால் பொருள் இல்லை
- தடதட , சலசல , திருதிரு என்றால் ஏதோவொரு குறிப்பு.
- குறிப்பை உணர்த்துவதால் இவையும் ஒருவகை 'உரிச்சொல்'.
- இரட்டைக்கிளவியில், இரண்டு சொற்களுக்கும் இடையில் "ஒற்று" வராது.
எந்தவொரு பொருளும் (meaning) இல்லாத சொல் , இருமுறை தொடர்ந்து வந்து , ஒரு குறிப்பை உணர்த்துவது 'இரட்டைக்கிளவி'.
SUBSCRIBE here to nallatamil grammar