'குழந்தை அழுதான்/அழுதாள்' என்று 'உயர்திணைப் பால் காட்டும்
வினைமுற்றில்' எழுதவேண்டும். ஆனால் 'குழந்தை அழுதது' என்று 'அஃறினை
வினைமுற்றில்' எழுதுவதே அலங்கடை.
'வன்தொடர் குற்றியலுகரம்' என்று மரபு மற்றும் வினைத்தொகை விதியினும் சார்ந்து எழுதுகின்றோம். ஆனால் 'வன்தொடர்க் குற்றியலுகரம்' என்று பண்புதொகை அடிப்படையில் 'ஒற்று'ப் போட்டுத்தான் எழுதவேண்டும். சிலவிடங்களில் பொருள் (meaning) விளங்குவதற்காக அல்லது மரபின் காரணமாக, விதிகளை மீறி எழுதுவதும் சரியே. ஆனால் முதலில் இலக்கண விதிகள் தெரிய வேண்டும். பின்னர் 'மரபும்' 'அலங்கடைகளும்' [exceptions] தெரிய வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வழி 'வாசிப்பு'. ' Reading habit' helps in understanding the nuances of any language.
சமகால எழுத்தாளர்களின் நூல்களை கட்டுரைகளை வாசியுங்கள். கல்வியாளர்களை விட மொழியின் நுட்பத்தை அறிந்தவர்கள் எழுத்தாளர்களே. They don't teach, they express themselves. அழகியல் (aesthetics) கருதியும் எழுத்தாளர்கள் இலக்கண விதிகளை மீறுவர். 'இலக்கணம் மாறுதோ, இலக்கியமானதோ' என்று கவிஞர் குறிப்பிடுவது இதைத்தான்.
மொழி அறிந்து , அதனைத் தேவை கருதி மீறலாம். மொழியின் அடிப்படையே 'செய்தித் தொடர்பு' (communication). முதலில் 'இலக்கணம்' பின்னர் 'மரபு சார்ந்த அலங்கடைகள்'. அலங்கடைகள் என்பது 'இலக்கணம் அல்ல', 'இலக்கணத்தை மீறும் இடங்கள் அல்லது விதி விலக்குகள்' (exceptions).
பண்புதொகை என்பதைப் 'பண்புத்தொகை' என்று எழுதி, அதையே மரபாக மாற்றினால் , 'கரும்புத்தோட்டம்' 'கழுகுப்பார்வை' 'மருந்துக்கடை' என்று தவறாகவே எழுதவேண்டிவரும். இது அலங்கடை ஆகாது. பின்னர் எப்படிப் பிழையின்றி எழுதுவது ? நிச்சயம் ஏதோவொரு பிழை ஏற்படும். அதனூடே கற்றுக்கொண்டு பிழைகளைக் களைந்து முன்னேறிச் செல்வதுதான் வழி. அதற்குத் துணை நிற்பது 'வாசிப்பு'. Grammar is not a tough nut to crack.