Skip to main content

அது என்ன 'அத்து' ?

வானத்தைப் பார்த்தேன் :
வானத்தை  =   வானம்   + அத்து  +  ஐ 

மரத்தை வெச்சவன்      : 
மரத்தை      =   மரம்      + அத்து  +  ஐ 

உள்ளத்தில் நல்ல உள்ளம் :
உள்ளத்தில்  =  உள்ளம்  + அத்து  +  இல்  
             :  
அது என்ன ' அத்து '?


மகர 'ஈற்று' நிலைமொழி அடுத்து வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வந்தால் 'அத்து ' என்ற 'சாரியை' வரும்.  

எ.க
பணத்தை    =  பணம் +  அத்து  +  ஐ  
குணத்தில்   =  குணம் + அத்து   +  இல்

' அத்து + இன் ' என்று ஆறாம் வேற்றுமையில் இரண்டு சாரியைகள் வரும் இடங்களுமுண்டு.

எ.க
பணத்தினது மதிப்பு =  பணம் + அத்து + இன் + அது + மதிப்பு 

வேற்றுமை உருபுகள் தொக்கி(மறைந்து) வரும்பொழுது ' சாரியைகள் ' சிலவிடங்களில் மறைந்தும் சிலவிடங்களில் வெளிப்படையாகவும் வரும்.

எ.க
பணத்தினது மதிப்பு = பணமதிப்பு / பணத்து மதிப்பு                         

மொழியில் சில ஈற்று எழுத்துகள் வேற்றுமை உருபோடு புணரும்பொழுது வேறு பொருள் தந்துவிடும். அல்லது உச்சரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் 'சாரியைகளை' ஏற்று வருமாறு அமைத்துள்ளனர் முன்னோர்கள். அதற்குப் 'பொருள்' (meaning) என்று எதுவும் இல்லை. அவை வெறும் FILLERகள் மட்டுமே. எனவே அவை ஒருவகை இடைச்சொற்கள் தான்

சாரியைகள் என்னும் 'இடைச்சொற்கள்' கற்க