Skip to main content

குற்றியலிகரம் : யானைகளுக்கு என்ன தொடர்பு

* குற்றியலுகரம் என்றால் என்னவென்று நாம் அறிவோம்.

* அத்து என்ற 'சாரியை'யை அறிவோம்.

=    பட்டம்    +  அத்து    +   யானை
    நிலைமொழி     சாரியை    வருமொழி

=    பட்டத்து                   + யானை 

=    பட்டத்தியானை  

'து' எப்படித் 'தி' ஆயிற்று ?

- கு, சு, டு, து, பு, று, வு என்ற குற்றியலுகர எழுத்துகளை அடுத்து  'ய/யா' (யகரம்) என்னும் எழுத்தில் வருமொழி வந்தால், உகரம் இகரமாக மாறும்.

- ஒரு மாத்திரை அளவு (அளபு) ஒலிக்க வேண்டிய 'இ' அரை மாத்திரை அளவே ஒலிக்கும் ( அப்படித்தான் உச்சரிப்போம். )

பட்டத்து + யானை                     =  பட்டத்தியானை
காட்டு    + யானை                      =  காட்டியானை
களிறு  ஆகிய/என்னும் யானை     =  களிற்றியானை


 
1.  உகரம் அடுத்து ' ய / யா ' (யகரம்)  வந்தால்  ' உகரம் '  'இகரமாக' மாறும்.
2. அந்த 'இகரமும்' தன் இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து 'அரை' மாத்திரை அளவே குறுகி ஒலிக்கும்.

குற்றும் + இயலை + உடைய + 'இ'கரம் = குற்றியலிகரம்.

குற்றியலிகரம் காணொளியைக் காண