Skip to main content

Posts

Showing posts from May, 2020

பன்மை உரைக்கும் 'கள்' விகுதி

'கள்' என்ற விகுதி  (Suffix) பன்மை (plural) உரைக்கும் என்று நாமறிவோம். எழுத்து             -       letter       -  (ஒருமை)  singular எழுத்துகள்       -       letters      -  (பன்மை) plural எ.க.    தமிழின் சிறப்பு எழுத்து 'ழ'            தமிழ் எழுத்துகள் அழகானவை. ஒரு பெயர்ச்சொல்லுடன் 'கள்' சேர்ந்தால் பன்மை வருகின்றது.

அலங்கடைகள் [ exceptions ]

'குழந்தை அழுதான்/அழுதாள்'  என்று 'உயர்திணைப் பால் காட்டும் வினைமுற்றில்' எழுதவேண்டும். ஆனால் 'குழந்தை அழுதது' என்று 'அஃறினை வினைமுற்றில்' எழுதுவதே அலங்கடை.

அடுக்குத்தொடர்

இரட்டைக்கிளவி என்ற உரிச்சொல்லை ' இங்கு ' பார்த்தோம். பொருள் (meaning) உள்ள சொற்கள் அடுக்கி வருவது ' அடுக்குத்தொடர் ' பொருள் (meaning) இல்லாத சொற்கள் இரண்டுமுறை அடுக்கி வருவது ' இரட்டைக்கிளவி ' பட்டுப்பட்டுப் பூச்சி போல -  பட்டு     + பட்டு தொட்டுத்தொட்டு              -  தொட்டு + தொட்டு பேசப்பேச                        -  பேச   +  பேச தீத்தீத்தீ                               -  தீ  +  தீ   +  தீ [ வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள்] To insist/stress something. 'பொருள் உள்ள சொற்கள்' அடுக்கி வந்து ஒரு அழுத்தத்தை உணர்த்துவது அடுக்குத்தொடர். 'பேசப்பேச ' என்னும்பொழுது அதுவொரு அழுத்தத்தை (again and again) தருகின்றது. - அடுக்குத் தொடரில் 'ஒற்று' வரும். - அலங்கடை : பெயரடை     *   சின்ன சின்ன வண்ணக்குயில்    *   சின்ன சின்ன கண்ணிலே    *   பெரிய பெரிய கொசு ஏன்  ,      ' பாம்பு பாம்பு' என்று சொல்லும்போது 'ஒற்று' வரவில்லை. சரியாகக் கணித்துவிட்டீர்கள். குற்றியலுகரம் . SUBSCRIBE to our free video lessons

இரட்டைக்கிளவி என்னும் Onomatopoeia

இரட்டைக்கிளவி என்றால் என்னவென்று நாமறிவோம். ஆம் ' உரிச்சொல் ' தான். ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்போருக்கு 'Ding Dong' என்று எழுதினால், அது மணியோசையைக் குறிக்கின்றது என்று புரியும். ஒரு 'ஒலியை' குறிக்கின்றது என்று புரிந்துகொள்வார்கள் . அதைப்போலத் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களில் 'டிஷ்யூம்/Dishyum' என்றால் சண்டையில் அடிவிழும் பொழுது எழும் 'ஒலி' என்று நாம் அந்தக்  குறிப்பை உணர்ந்துகொள்வோம். இதைப்போன்ற 'இசை/ஓசை/ஒலி'க் குறிப்பை உணர்த்தும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் onamatopoeia என்று பெயர்.

தமிழில் எப்படிப் பேச: நேர்பட x நேர்ப்பட ?

தமிழில் ஏதோவொரு பண்பை , தன்மையை உரைக்கும் (பெயர்ச்)சொல்லை "வினைச்சொல்லாக" மற்ற முடியும். தமிழில் ' மெய் ' என்ற சொல் உடல் , உண்மை  என்ற குறிப்பை உணர்த்துகின்றது. மெய் -  something that is present ( ubiquitous / universal). மெய் என்பது ஒரு 'குறிப்பு'. வினைச்சொல் அல்ல.ஆனால் இதை வினைச்சொல்லாக மாற்றமுடியும். எப்படி ?

அது என்ன 'அத்து' ?

வானத்தைப் பார்த்தேன் : வானத்தை  =   வானம்   + அத்து  +  ஐ  மரத்தை வெச்சவன்      :  மரத்தை      =   மரம்      + அத்து  +  ஐ  உள்ளத்தில் நல்ல உள்ளம் : உள்ளத்தில்  =  உள்ளம்  + அத்து  +  இல்                :   அது என்ன ' அத்து '?

Dictionary x Thesaurus : அகராதி x நிகண்டு

ஆங்கிலத்தில் Dictionary மற்றும் Thesaurus க்கு உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை நமக்குத் தெரியும். Dictionary gives the 'meaning'. Thesaurus gives meaning, synonyms, antonyms.  ஆம் சரி, கிட்டத்தட்ட உரிச்சொல் அகராதிதான்.  [ உரிச்சொல் lessons ]

குற்றியலிகரம் : யானைகளுக்கு என்ன தொடர்பு

* குற்றியலுகரம் என்றால் என்னவென்று நாம் அறிவோம். * அத்து என்ற ' சாரியை 'யை அறிவோம். =    பட்டம்    +  அத்து    +   யானை     நிலைமொழி     சாரியை    வருமொழி =    பட்டத்து                   + யானை  =    பட்டத்தியானை  

காகிதக் கப்பல்

1 இயற்சொல்  : தமிழ் அறிந்த அனைவராலும் பொருள் மாறாமல் புரிந்து கொள்ளக் கூடிய தமிழ்ச்சொல் 2 திரிசொல்     : இயல்பான உச்சரிப்பு (pronounciation) / பொருளில் (meaning) இருந்து  திரிந்து வரும் சொல் 3 திசைச்சொல் : ஏதோவொரு ஊரிலும் பகுதியிலும் மட்டுமே பேசப்படும் சொல். வட்டாரச் சொல். 4 வடசொல்     : வேறு மொழியிலிருந்து வந்த சொற்கள்.

ஒரெழுத்து ஒருமொழி : அடுத்து ஒற்று வராது

'ஒரெழுத்து ஒருமொழி' என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது. 'ஒரெழுத்து ஒருமொழி' அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை. ஒரெழுத்து ஒருமொழி : அடுத்து ஒற்று வராது பூ   -  ஒரேழுத்து ஒருமொழி  , இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]          பூ + கடை    =   பூக்கடை          பூ + பூத்தது  =   பூப்பூத்தது

இணையதளம் x இணையத்தளம் : எது சரி ?

இரண்டு சொற்கள் புணரும் பொழுது , 1.  முதலாவதாக வரும் சொல்லின் பெயர் " நிலைமொழி " 2.  இரண்டாவதாக வரும் சொல்லின் பெயர் "வருமொழி" வருமொழியின் முதலெழுத்துக்   க , ச , த , ப   என்று வந்தால், இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒற்று வரவேண்டும் என்பது அடிப்படை விதி .  ஆனால் 'ஒற்று' வருமா வராதா என்பதை உறுதி செய்வது நிலைமொழியின் ஈற்று( கடைசி) எழுத்து தான்.