Skip to main content

 உயிரளபெடை : மழை வரும் பொழுது

ஒரு எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ' அளவு / அளபு / மாத்திரை ' என்றழைக்கப்படுகின்றது

The ' unit of time taken ' to pronounce a letter is called Alavu / Alabu [ Maathra ] .  An unit is roughly the time taken to wink your eyes or snap your fingers

உயிர்க்குறில்  [ அ , இ , உ , எ, ஒ       ]   -  1      மாத்திரை         short vowels
உயிர்நெடில்   [ ஆ , ஈ , ஊ , ஏ, ஓ , ஐ ]   -  2     மாத்திரை         long vowels
மெய்             [  க் , ங் , ச்   ....               ]   -  1/2  மாத்திரை         consonants
உயிர்மெய்க்குறில் [ க , ங , ச .....        ]   -  1     மாத்திரை         short consonantal vowel
உயிர்மெய்நெடில்  [ கா , கீ ,  சா .....    ]   -  2     மாத்திரை         long consonantal vowel


தமிழ் மொழியில் எந்த எழுத்தும் இரண்டு மாத்திரை அளவைத் தாண்டி ஒலிக்காது. ஆனால் ......

ஆனால் செய்யுள் / பாடல் [ poem] வழக்கில் இசை / அசை [ filler ] வேண்டி , இரண்டு மாத்திரை அளவைத் தாண்டி ஒலிக்கும். பேச்சு வழக்கில் அல்ல , செய்யுள் வழக்கில். எப்படி

சில பாடல்களை எடுத்துக்கொள்வோம் ,

1.   ' கண்ணா உனைத் தேடுகின்றேன் நான் ' -   ஆனால் பாடலாகப் பாடும்பொழுது இசையை நிரப்பி ' கண்ணாஆஆஆ உனைத் தேடுகின்றேன் நான் ' - என்று புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப உயிர் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.

2.   ' எங்கிருந்தாலும் வாழ்க'    ->   ' எங்கிருந்தாலும் வாஅழ்க '.

உயிரளபெடை  =       ' உயிர் +  அளபு +  எடை '  கூடும் இடங்கள்.

விதிகள்:

எழுத்துகளில் ' நெடில் எழுத்து ' அடுத்து மட்டுமே அளபு கூடும்
*   அவ்வெழுத்தின் ' இன உயிர்க்குறில் ' அளபெடுத்து வரும்.

எ.க   ஆ என்ற ஓசையை அடுத்து 'அ' என்ற இன உயிர்க்குறில் அளபெடுக்கும் -     நிலாஅஅ

சரி, மழைக்கும் அளபெடைக்கும் என்ன சம்பந்தம். ஒன்றும் இல்லை :-)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

- இத்திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன . திருக்குறளின் சிறப்பே அதனுள் பல   உருவகங்கள் வருவதே. ஒவ்வொரு உரையாசிரியரும் அவரவருக்குப் பொருள் பட்டதை விளக்குவர். அளபெடையை மனதில் கொண்டு பார்த்தால் இங்கு மேலும் ' ஒரு ' பொருள் கிடைக்கின்றது. 

1.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

2.
துப்பார்க்குத் துப்பு ஆயது உப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை

3.
உண்பவரின் உணவானதை உப்பாக்கி
உண்பவர் அருந்தும் நீர் ஆவதூஉம் மழை                                    

Is he speaking about food and water ? salt and blood?  life ?  whatever ... its RAIN.

துப்பு  -   உணவு , கஞ்சி* ,
துப்பு  -   குருதி [ ரத்தம் ] , சிவப்பு , பவழம் [ corol ], நீர்

உயிரளபெடை :
இரண்டாவது அடியில்

* துப்பாய தூஉம் மழை   -      இது    '  துப்பாய தூவும் மழை ' யா  அல்லது ' துப்பு ஆயதூம் மழை ' யா ?

துப்பாய -  எச்சம் என்ற பொருளில் வந்தால், துப்பாய[த்] என்று 'ஒற்று' வரவேண்டும். ஆனால் வரவில்லை

தூஉம் மழை -  தூ+உம் , என்றால்   'தூ+வ்+உம்' என்று "வ்" ஆகிய உடம்படுமெய் தோன்ற வேண்டும். ஆனால் வரவில்லை

Final Thought :

துப்பு ஆயதூஉம் ->   துப்பு ஆவதும் , என்றால் ' நீர் ஆவதும் ' என்று பொருள் வருகிறது. இப்பொருளில் "தூ" அடுத்து வரும் "உ" அளபெடை.

Just a filler to give 'insistence' to rain. குறிலை நெடிலாக்கிப் பின்னர் அளபெடுத்து எழுதுவதும் மரபில் உண்டு.

SUBSCRIBE here to nallatamil grammar