Skip to main content

பொறியாளரும் ஆய்த எழுத்தும்

ஆய்த எழுத்தென்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை.

- ஆய்த எழுத்தென்பது  " முப்பாற்புள்ளிகள் "   ( 3 droplets )

- ஆயுதமாகிய " கேடயம் " ( armour) போலிருப்பதால் இப்பெயரைப்        பெற்றிருக்கலாம்.

 - அல்லது "ஆய்தலாகிய" பிரித்தல் தொழிலைச் செய்வதால் "ஆய்ந்த " எழுத்து என
           அழைக்கப்பட்டிருக்கலாம்.

       - ஆங்கிலத்தில்  a[h] என்பதை உச்சரிப்பதைப் போல உச்சரிக்க வேண்டும்.

       - இவ்வெழுத்தை  உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலஅளவு "1/2" மாத்திரை.

       - சொற்களில் இது மேலும் குறைந்து "1/4" மாத்திரை அளவே ஒலிக்கும்.  இவ்வாறு
            ஆய்தம் குறைந்து ஒலிப்பதை "ஆய்தக்குறுக்கம்" என்பர்.

       - ஆய்த எழுத்தை அடுத்து " வல்லெழுத்து "  ( க் , ச் , ட் , த் , ப் , ற்   ) சார்ந்த
             உயிர்மெய் எழுத்துகளே வரும்.
 
       - ஆய்த எழுத்தின் முன்னர் குறில் தான் வரும்.  [ பண்டைய இலக்கண வழக்கு ]         
 
தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார்  [ 1871 - 1931 ] ,  பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து "ஆய்த எழுத்தை" மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார்.

முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம்.

பயிற்சி 1:

    1.              பல்துளி + ஆறு   =>   பல துளிகளால் ஆன ஆறு.

    2.              ப  +  ல் +   துளி              +   ஆறு

    3.              ப  +  ற்  +  துளி               +   ஆறு     [ புணரியலில் 'ல்' ->'ற்' ஆக மாறும்
                                                                                         கல் + சிலை  => கற்சிலை]
    4.              ப  +  ற்  +   த்உ   + ளி     +    ஆறு                        
                     ப  +  ற்  +   உ   + ளி       +    ஆறு     [ புணரியலில் றகரம் அடுத்து
                                                                               வரும் தகரம் கெடும் ]
    5.              ப  +  _  +  ற்உ    + ளி     +    ஆறு     [ றகரம் தன்னிடத்தில்
                                                                                இருந்து பிரிந்து சென்று
                                                                                 உகரத்தொடு சேரும் -இந்தப்
                                                                               பிரித்தலைச் ( ஆய்தலைச் )
                                                                               செய்ய  ஆய்தம் தோன்றும்      ]
    6.              ப  +  ஃ  +   று  +  ளி           +   ஆறு                           

    7.              பஃறுளி ஆறு                                                     pahruli


பயிற்சி 2:        

    1.            உயர்திணை    -     கடவுள்   மனிதர்    நரகர்
                  அல்திணை     -     மற்ற உயிருள் , உயிரல் [ உயிர் அல்லாத] பொருட்கள்

    2.            அல்திணை      -    அல்          +   திணை    
                                         -    அல்          +   தி     +  ணை
                                         -    அ  + ல்    +   த்இ   +  ணை
                                         -    அ  + ற்     +   த்இ   +  ணை
                                         -    அ  + ற்     +   _இ    +  ணை
                                         -    அ  + _      +   ற்இ   +  ணை                          
                                         -    அ  + ஃ     +    றி    +  ணை
                                         -    அஃறிணை

தமிழ் மொழியில் F என்ற ஓசை இல்லை.

FAST   -  பாஸ்ட்
COFFEE -  காபி         என்றே எழுதி வந்தனர்.

'F' போன்ற வேறு மொழி எழுத்துகளைத் தமிழ்ப்படுத்தத் தமிழறிஞர் திரு. பா.வே. மாணிக்கனார்   'ஆய்த' எழுத்தைப் பயன்படுத்தலாம் என வழி செய்தார்

FAST   -  பாஸ்ட்    -    ஃபாஸ்ட்
COFFEE -  காபி        -    காஃபி


குறிப்பு:-

நீலகிரி மாவட்டம் " பர்லியார் "
கன்னியாக்குமரி மாவட்டம் " பரளியார் "
ஆய்தல் - ஆய்ஞ்சு : வட்டார வழக்கு
சங்கப் பாடல்களில்  ' பஃறுளி ஆறு '