Skip to main content

Posts

Showing posts from April, 2020

ஒற்றளபெடை : பொன் மானின் கோபம்

உயிரெழுத்து அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை. விதிகள்: *   தனிக்குறில் ( lone short letter ) *   குறிலிணை  ( pair of short letters).    அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும். எ.க -    '  பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.               ' பொன்ன்ன் மானே .....   கோபம் ஏனோ ' எ.க -    ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை               'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்'  என்று  ' அளபெடுத்துப் பாடமுடியும். அதே 'வானம்'  'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது. Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும். SUBSCRIBE here to nallatamil grammar

அரை மாத்திரை

இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய் விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.

 உயிரளபெடை : மழை வரும் பொழுது

ஒரு எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ' அளவு / அளபு / மாத்திரை ' என்றழைக்கப்படுகின்றது The ' unit of time taken ' to pronounce a letter is called Alavu / Alabu [ Maathra ] .  An unit is roughly the time taken to wink your eyes or snap your fingers உயிர்க்குறில்  [ அ , இ , உ , எ, ஒ       ]   -  1      மாத்திரை         short vowels உயிர்நெடில்   [ ஆ , ஈ , ஊ , ஏ, ஓ , ஐ ]   -  2     மாத்திரை         long vowels மெய்             [  க் , ங் , ச்   ....               ]   -  1/2  மாத்திரை         consonants உயிர்மெய்க்குறில் [ க , ங , ச .....        ]   -  1     மாத்திரை         short consonantal vowel உயிர்மெய்நெடில்  [ கா , கீ ,  சா .....    ]   -  2     மாத்திரை         long consonantal vowel

பொறியாளரும் ஆய்த எழுத்தும்

ஆய்த எழுத்தென்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை. - ஆய்த எழுத்தென்பது  " முப்பாற்புள்ளிகள் "   ( 3 droplets ) - ஆயுதமாகிய " கேடயம் " ( armour) போலிருப்பதால் இப்பெயரைப்        பெற்றிருக்கலாம்.  - அல்லது "ஆய்தலாகிய" பிரித்தல் தொழிலைச் செய்வதால் "ஆய்ந்த " எழுத்து என            அழைக்கப்பட்டிருக்கலாம்.