இலக்கண இலக்கிய சமய நூல்களில் புலமை மிக்கவராகவும் திருவாடுதுறை ஆதினத்தில் மாபெரும் தமிழ் கவிஞராகவும் தமிழ்ப்பற்று மிக்க மாணவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் விளங்கியவர் ' திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ' அவர்கள். இறையையும் தமிழையும் ஒன்றாகக் கருதி வாழ்ந்த தமிழறிஞர். சாதிமத வேறுபாடின்றித் தமிழ்க்கல்வி அளித்ததோடு மட்டும் அல்லாமல் மாணாக்கருக்கு உணவும் இடவசதியும் அளித்தார் . இவரது மாணாக்கரில் ஒருவர்தாம் ' உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சுவாமிநாதர் ' என்கின்ற ' உ.வே.சா '. பின்னாட்களில் ' தமிழ்த்தாத்தா ' என்றழைக்கப்பட்ட மகாமகோபத்தியாய டாக்டர். உ.வே.சா . ஆசிரியருக்கும் மாணாக்கருக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவாக இருந்தது. தமிழ்த்தாத்தா உ.வே.சா தமிழுக்கு ஆற்றிய அரும் பணியும் அவர்தம் வாழ்நாள் முழுவதும் தேடியலைந்து உரையெழுதிப் பதிப்பித்த சங்கத் தமிழிலக்கிய நூல்கள் இல்லையேல் இன்று நாம் இலக்கியங்களையே இழந்திருப்போம். அத்தகைய பெருமகனாரின் ஆசிரியரான ' திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சு
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்